Wednesday, April 18, 2012

நீதிக்கதைகள்-1

நெடுங்காலத்திற்கு முன் மதிப்புமிக்க ஒரு நாட்டை ஒரு அரசன் ஆண்டு வந்தான். ஒரு நாள் தன் நாட்டை சுற்றி பார்க்க நடந்தே சென்று கவலையுடன் திரும்பி வந்தான். பாதைகள் கற்களும் முட்களுமாக இருந்ததால் தன் கால் வலிக்கிறது என்றும், மக்கள் அனைவரும் பாதை முழுக்க தோலால் ஆன புதியபாதை அமைக்க ஆணையிட்டான்
இதனை கேட்ட அமைச்சர் ஒருவர் இவ்வாறு பாதை அமைப்பதால் ஆயிரக்கணக்கான மாடுகள் கொல்லப்பட வேண்டிவரும் மேலும் பணமும் விரயமாகும் என்று அறிவுரை கூறினார்.
அரசன் இதற்கு மாற்றாக என்ன செய்ய வேண்டுமென வினவினார்.அதற்கு அமைச்சர் மன்னா இவ்வளவு பெரிய பாதைக்கு தோல் போர்வை அமைப்பதற்கு பதிலாக உங்கள் காலுக்கு ஏற்ற அளவு தோலை வெட்டி போர்வையாக அணிந்து கொள்ளலாம் என ஆலோசனை கூறினார்.மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்து அமைச்சருக்கு பொன்னும் பொருளும் வழங்கினார். காலணியும் உருவாயிற்று

இந்த கதையில் சொல்லப்படும் நீதியானது : உலகை இனிமையானதாக மாற்ற விரும்பினால் முதலில் நீ மாற வேண்டும். அதாவது மாற்றம் என்பது தனியாளிடம் இருந்து உருவாகினால் உலகம் இனிமையாகும்

உலகத்திரைப்படங்கள் ஒரு பார்வை -1--- EXAM (2009)

இங்கிலாந்தில் ஒரு வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் கோமா வரை கொண்டு சென்று இறப்பில் முடிந்து விடும். அதற்காக குறிப்பிட்ட ஒரு மருந்தை குறிப்பிட்ட மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிட வேண்டும்.
அந்த வைரஸ் தொற்றிற்கு ஒரு மாற்று மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனத்தில் சி.இ.ஒ விற்கு தனி உதவியாளராக பணிபுரிய ஒரு தேர்வு நடைபெறுகிறது.
இங்குதான் சுவாரசியம் ஆரம்பமாகிறது. அத்தேர்விற்காக எட்டு நபர்கள் எட்டு இருக்கைகள் மற்றும் ஒரு காவலாளி உள்ள் ஒரு தனி அறையில் அமர்த்தப்படுகிறார்கள். இந்த அறை முழுவதும் கேமராக்களால் கண்காணிக்கப்படுகிறது.
கண்காணிப்பாளர் ஒருவர் உள்ளே நுழைந்து தேர்வு முறைகளை விளக்குகிறார்.
தேர்வு காலம் 80 நிமிடங்கள் மற்றும் மூன்று விதிமுறைகளை கூறுகிறார்.
1.தன்னிடமோ அல்லது காவலரிடமோ பேசக்கூடாது.
2.விடைத்தாளை சேதம் செய்யக்கூடாது
3.எந்த காரணத்தைக் கொண்டும் அறையை விட்டு வெளியேறக்கூடாது
மற்றும் உங்கள் முன் ஒரு கேள்வி இருக்கிறது அதற்கு ஒரு விடைதான் எங்களுக்கு தேவை என சொல்லி வேறு ஏதேனும் கேள்வி இருக்கிறதா என கேட்கிறார். முதல் விதிமுறையின் காரணத்தால் அனைவரும் மவுனமாக இருக்கின்றனர். பிறகு நேரத்தை துவங்கிவிட்டு அவர் வெளியேறுகிறார்.
பின்பு ஒவ்வொருவரும் தன் விடைத்தாளை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். அதில் கேள்வியே இல்லை. படம் இங்கிருந்து சூடுபிடிக்கிறது. கேள்வியை கண்டுபிடிக்க என்னென்ன வேலைகளை செய்கிறார்கள் முடிவு என்ன என்பதை நீங்களே பார்த்து விடுங்கள்
படம் முழுவதும் ஒரே அறையில் மேலும் சுவாரசியமாகவும் கொண்டு செல்ல வேண்டும் இதையெல்லாம் திறம்பட செய்து இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
பார்த்த பின் கருத்துக்களை எழுதுங்கள்

Directed by Stuart Hazeldine
Produced by Stuart Hazeldine,Gareth Unwin
Written by Stuart Hazeldine, Simon Garrity
Music by Stephen Berton, Matthew Cracknell
Cinematography Tim Wooster
Country-- United Kingdom
Language English
Running time 101 minutes